தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வீட்டில் கள்ளச்சாராயம்... ரெய்டு சென்ற காவலரின் விரலைத் துண்டித்த தம்பதி! - 2 cops attacked by couple

திருவனந்தபுரம்: வீட்டிற்கு ரெய்டு வந்த காவலர்களைத் தம்பதி தாக்கியது மட்டுமின்றி ஒருவரின் கை விரல்களைத் துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தம்பதி
தம்பதி

By

Published : Apr 13, 2020, 12:25 PM IST

கேரளா மாநிலம் இடுக்கி பகுதியில் உப்புதர கிராமத்தில் உள்ள வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகக் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வீட்டுக்குள் திடீரென்று சோதனை நடத்தினர்.

அப்போது, அவர்கள் தாங்கள் காய்ச்சி வைத்திருந்த சாராயத்தைக் கீழே ஊற்றிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த காவல் துறையினர், அவர்களை தடுக்க முயன்றபோது வாக்குவாதத்தில் சண்டை ஏற்பட்டது.

அப்போது அந்தத் தம்பதி, இரண்டு காவலர்களைப் பலமாகத் தாக்கியது மட்டுமின்றி ஒருவரின் கை விரலையும் துண்டித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:ஆந்திராவில் 420 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details