ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பகர்வால் பழங்குடியின பிரிவை சேர்ந்தவர்கள் தற்காலிக கூடாரம் அமைத்து வசித்துவருகின்றனர். அக்கூடாரத்தால் ஜம்மு-காஷ்மீரின் கடும் குளிருக்கு ஈடுகொடுக்கமுடியவில்லை.
இதனால் அந்தக் கூடாரத்தில் வசித்த இரண்டு குழந்தைகள் தீவிர காய்ச்சலால் அவதிப்பட்டுவந்தனர். இதில் 10 வயதேயான ஷாகில் சபிர் கூடாரத்திலேயே உயிரிழந்தார். அவரது சகோதரர் 6 வயதான ஷாசியா ஜான் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஷாசியாவும் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.