இந்தியாவின் 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் 18 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியதையடுத்து, மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்த வண்ணம் உள்ளனர்.
நக்சலைட் மிரட்டலையும் மீறி ஜனநாயக கடமையாற்ற வரும் மக்கள்! - நக்சலைட் மிரட்டல்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்கள் வாக்களிக்க வரக்கூடாது என மிரட்டல் விடுத்தும், ஜனநாயக கடமையாற்ற மக்கள் வாக்களிக்க வந்துள்ளனர்.
![நக்சலைட் மிரட்டலையும் மீறி ஜனநாயக கடமையாற்ற வரும் மக்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2967107-thumbnail-3x2-cha.jpg)
1st phase electionin in chhattisgarh
நக்சலைட்டுகள் அதிகம் உள்ள மாநிலமான சத்தீஸ்கரில் இன்று ஒரு மக்களவைத் தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் காலை முதலே வாக்களித்துவருகின்றனர்.
முன்னதாக மக்கள் யாரும் வாக்களிக்கச் செல்லக்கூடாது என நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்திருந்தனர். இருந்தும் மக்கள் ஜனநாயக கடமையாற்ற வாக்களிக்க ஆர்வமுடன் வருகின்றனர்.