மே 9ஆம் தேதி இமாச்சலப்பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் பற்றிய கேள்விக்கு, " நடந்தது, நடந்து விட்டது! என்ன செய்வது?" என தெரிவித்தார்.
'சீக்கியர்களுக்கெதிரான கலவரம்... சாம் பிட்ரோடாவின் கருத்து தவறானது!' - Rahul Gandhi
டெல்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் பற்றிய சாம் பிட்ரோடாவின் கருத்து தவறானது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, "இந்த கருத்து காங்கிரசின் மன நிலையையும், உணர்ச்சியற்ற தன்மையையும் காட்டுகிறது" என குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "1984இல் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரம் கொடூரமானது. இந்தக் கலவரத்தை பற்றி சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து தவறானது. அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.