கரோனா வைரஸ் நோய்த் தொற்று தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் அதிவேகமாகப் பரவி வருகிறது.
குறிப்பாக, கன்னூர், திருச்சூர், மலப்புரம் போன்ற மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது கூடுதலாக 19 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா வைரஸ் தொற்றுக்கு கேரளாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.
இவர்கள் இன்றி ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.