தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வந்தே பாரத் திட்டம் மூலம் 19.40 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்! - வெளியுறவுத்துறை அமைச்சம்

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 19.40 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

Anurag Srivastava
Anurag Srivastava

By

Published : Oct 22, 2020, 8:25 PM IST

கரோனா பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளது. எனவே வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள், மத்திய அரசின் ’வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

கடந்த மே 7ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் மூலம் மத்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில், தற்போது ஏழாவது கட்டமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக முக்கியத் தகவல்களை வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அதில், “ஏழாவது கட்ட வந்தே பாரத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி மொத்தம் 900 விமானங்கள் இயக்கப்பட்டு, சுமார் 22 நாடுகளிலிருந்து 19.40 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதுவரை திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர். ஏர் இந்தியா, இண்டிகோ, கோ ஏர், ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் இந்தச் சேவையை மேற்கொண்டுள்ளன.

அடுத்த கட்டமாக சுமார் ஆயிரத்து 50 விமானங்கள் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்பவுள்ளனர் " எனக் கூறியுள்ளார். ஏழாம் கட்ட வந்தே பாரத் திட்டம் இம்மாத இறுதிவரைத் தொடரும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:இந்தியாவின் டாப் சுற்றுலாத்தளமாக உருவெடுத்த உ.பி ; 2வது இடத்தில் தமிழ்நாடு!

ABOUT THE AUTHOR

...view details