இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரசைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிராக களமிறங்கியுள்ளன. பல மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
அந்த வகையில், தெலங்கானா மாநிலத்திலும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. நேற்று (ஆகஸ்ட் 01) ஒரே நாளில் 1,891 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 677ஆக உயர்ந்துள்ளது.