நான்கு வருடத்திற்கு ஒரு முறை வரும் லீப் தினமான பிப்ரவரி 29 ஆம் தேதி, இன்று வந்துள்ளது. பூமி சூரியனை ஒரு முறை சுற்றிவரும் நேரத்தை ஒரு வருடமாக கணக்கில் கொள்ளும் நிலையில், அதை சரியான அளவில் சமன்படுத்தும் விதமாக, நான்காண்டுக்கு ஒரு முறை பிப்ரவரி மாதத்தின் ஒரு நாள் அதிகமாக வைத்து பிப்ரவரி 29 ’லீப் டே’ முறையைப் பின்பற்றிவருகிறோம்.
இந்த தினத்தின் சிறப்பை குறிக்கும் விதத்தில், குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் பட்டேல் ஒற்றுமை சிலைக்கு முன்பாக 182 யோக கலைஞர்கள் 108 விதமான சூரிய நமஸ்காரம் எனப்படும் சுரிய வணக்கத்தை மேற்கொண்டனர்.