தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி.யில் 18 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் - உ.பி.யில் 18 வயது பெண் கற்பழித்து எரிப்பு

லக்னோ: உனிப்பூர் கிராமத்தில் 18 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

18-yr old raped
18-yr old raped

By

Published : Dec 14, 2019, 7:21 PM IST

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான் பாலியல் வன்முறை தொடர்ந்துவருகிறது. முக்கியமாக உத்தரப் பிரேதச மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மோசமான சூழல் நிலவுகிறது. அண்மையில், உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற இடத்தில் இயற்கை உபாதைக்காக சென்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ளது. ஃபதேபூர் மாவட்டம் உனிப்பூர் கிராமத்தில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் 18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அப்பெண்ணின் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து படுகொலை செய்தார்.

தற்போது அந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஃபதேபூர் மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் சிங் கூறுகையில், அப்பெண் ஆபத்தான நிலையில் இருக்கிறார். கான்பூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.


இதையும் படிங்க: உ.பி.யில் ஐந்து வயது மகளைக் கொன்று தாயும் தற்கொலை: நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details