தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கரோனா பரவல்: மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லையா?': சிகிச்சை இல்லாமல் 18 வயது மாணவன் மரணம்! - மேற்கு வங்கம் கொரோனா

கரோனா தொற்று பாதித்த நீரிழிவு நோயாளியான 18 வயதுடைய மாணவருக்கு மூன்று மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளன. பின்னர், கொல்கத்தா மருத்துவமனையில் அவரின் தாய், மகனுக்கு சிகிச்சை அளிக்கவில்லையெனில் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியதையடுத்து, அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.

West Bengal coronavirus, மேற்கு வங்க கொரோனா
West Bengal coronavirus

By

Published : Jul 12, 2020, 11:12 AM IST

கொல்கத்தா (மேற்கு வங்கம்):நீரிழிவு நோயாளியான 18 வயது மாணவருக்குக் கரோனா உறுதியாகி, மூன்று மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சையளிக்க மறுத்ததையடுத்து மரணம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

'நோயாளியான சுப்ரஜித்தை கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடைசியாக அவரின் தாய் கொண்டு செல்லும்போது, அங்கும் அனுமதிக்கவில்லை. மகனுக்கு சிகிச்சை அளிக்கவில்லையெனில், தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியதையடுத்து தான், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி சுப்ரஜித் இறந்துவிட்டார்' என மாணவனின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை இயக்குநர் அஜோய் சக்ரபோர்த்தி தெரிவித்துள்ளார்.

ஒற்றை இலக்கத்தில் கரோனா பாதிப்பு; ஐநா பாராட்டு - உலகிற்கு ரோல் மாடலான 'தாராவி'!

மாணவன் இளம் நீரிழிவு நோயாளி ஆவார். ஜூலை 10ஆம் தேதி இவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கமர்ஹாட்டி இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கை இல்லையென திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, சுப்ரஜித்துக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அதில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சையளிக்க மறுத்துள்ளது.

மனம் தளராமல் மாணவனின் தாயும், தகப்பனும் சேர்ந்து அரசு கட்டுப்பாடில் உள்ள சாகர் டட்டா மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். அங்கும் அனுமதிக்கவில்லையாம். தன் பிள்ளையை அவசர ஊர்தியில் வைத்துக்கொண்டு இப்படி தாயும், தகப்பனும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் மகனுக்கு சிகிச்சையளிக்க யாசகம் கேட்பது போல மன்றாடியுள்ளனர்.

கரோனாவிலிருந்து தப்பித்த ஜஸ்வர்யா ராய்!

முடிவில், கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அங்கும் அதே பதில் தான் 'சிகிச்சையளிக்க படுக்கை வசதியில்லை'. மனமுடைந்த மாணவனின் தாய், 'மகனுக்கு சிகிச்சை கொடுக்கவில்லை என்றால், இந்த இடத்திலேயே தற்கொலை செய்துகொள்வேன்' என்று மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து மாணவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும், கால தாமதமாக சிகிச்சை அளிக்கப்பட்டதால், அது ஏற்றுக்கொள்ளாத சூழலில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கு இங்கு களையப்பட்டிருந்தால், தன் மகன் பிழைத்திருப்பான் என்று தந்தை குமுறிய காட்சி பார்ப்போர் மனதைக் கரையச் செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details