தெலங்கானா மாநிலம் ரச்சகொண்டா காவல் நிலையத்தினர் 'ஆப்ரேஷன் முஸ்கன்' என்ற பெயரில், குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுக்கும் பணியை தீவிரமாக செய்து வந்தனர்.
இந்நிலையில், ஹபிப், உஸ்மான் பகுதிகளில் உள்ள தொழிற்கூடங்களில் கண்ணாடி வலையல்கள் செய்வதற்கு, ஆபத்தான நிலையில் குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, ரச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ் பாக்வத் தலைமையிலான தனிப்படையினர், அந்த இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 56 குழந்தைத் தொழிலாளர்களை அவர்கள் மீட்டனர். அவர்களை வைத்து வேலை வாங்கிய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
குழந்தைத் தொழிலாளர்கள் 176 பேர் மீட்பு; 7 பேர் கைது! இந்த ஒரு மாதத்தில் மட்டும் 176 குழந்தைத் தெழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ரச்சகொண்டா காவல் ஆணையர் தெரிவித்தார்.