தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கடந்த 24 மணி நேரத்தில் 1,752 பேருக்கு கரோனா: சுகாதார அமைச்சகம்

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) மட்டும் நாட்டில் ஆயிரத்து 752 கோவிட்-19 தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். 37 உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 724 பேர் இந்த உயிர் கொல்லி நோய் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

Health Ministry
Health Ministry

By

Published : Apr 25, 2020, 2:24 PM IST

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் ஆயிரத்து 752 கோவிட்-19 தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். 37 உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 724 பேர் இந்த உயிர் கொல்லி நோய் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்தம் பதிவு செய்யப்பட்ட 17 ஆயிரத்து 915 நபர்களில், 4 ஆயிரத்து 814 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது கூறியதாவது;

கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக ஆயிரத்து 752 பேருக்கு கரோனா கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 23 ஆயிரத்து 452 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 724 ஆக உள்ளது.

கரோனா அச்சுறுத்தல்: எதிரியாக மாறிய கைகள்

கடந்த 28 நாள்களில் 15 மாவட்டங்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. அதேபோன்று கடந்த 14 நாள்களில் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 80 மாவட்டங்களில் ஒருவர் கூட கரோனா பாதிப்புக்கு ஆளாக்கவில்லை. கரோனா பரவும் இரட்டிப்பு விகித கால அளவு 7.5 நாள்களில் இருந்து 10.1 நாள்களாக அதிகரித்துள்ளது.

கரோனா மீட்பு விகிதம் 20.57% ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 4 ஆயிரத்து 748 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details