இந்தியாவில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் இன்று (ஜூன் 17) புதிதாக 175 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது.
ஒடிசாவில் 175 பேருக்கு கரோனா உறுதி! - COVID-19 cases in Odisha
புவனேஷ்வர்: ஒடிசாவில் புதிதாக 175 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அம்மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 338ஆக உயர்ந்துள்ளது. இந்த 175 பேரில் 145 பேர் பிற மாநிலங்களிலிருந்து ஒடிசாவிற்கு வந்தவர்கள் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், 21 பேர் தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவர்கள் எனவும், கரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இங்கு கரோனா பாதிப்பிலிருந்து 2 ஆயிரத்து 974 பேர் மீண்டுள்ளனர். இதுவரையிலும் 11 பேர் கரோனா பாதிப்பில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: போலி போலீஸ் ஐடியில் சுற்றித்திரிந்தவர் கைது!