மேற்கு வங்க மாநிலம், டைமன் ஹார்பர் தொகுதிக்கு வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் நிலன்ஜன் ராய், கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி அன்று 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவ பறிசோதனையில், அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. அந்த ஆதரங்களைக் கொண்டு காவல்துறையினரிடம் சிறுமியின் தந்தை புகார் தெரிவித்திருந்தும், நிலன்ஜன் ராய் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அம்மாநில சிறுவர்கள் பாதுகாப்பு உரிமை ஆணையத்தின் தலைவர் அனன்யா சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.