தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த இளைஞர் கைது! - மத்தியப் பிரதேசத்தில் சிறுமி கொலை

ஷாடோல்: 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

MP rape news  minor raped in shahdol  minor raped strangled dumped  Madhya Pradesh rape news  Madhya Pradesh murder news  மத்தியப் பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு  ஷடோல் சிறுமி பாலியல் வன்புணர்வு  மத்தியப் பிரதேசத்தில் சிறுமி கொலை  சிறுமி கொலை
minor raped in shahdol

By

Published : May 29, 2020, 8:55 PM IST

மத்திய பிரதேசம் மாநிலம், ஷாடோல் மாவட்டம் ஜெய்த்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில், 11ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி நேற்று முன்தினம் (மே 27) மாலை கோயிலுக்குச் சென்றிருந்த நிலையில் வீடு திரும்பவில்லை.

இதனால், சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து அப்பகுதி முழுவதும் தேடினர். ஆனால், எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று (மே 28) காலை சிறுமி கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் வீட்டருகே கிடந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக சிறுமியை ஷாடோல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இது குறித்து மருத்துமனை நிர்வாகம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், சிறுமி கோயிலுக்குச் சென்றிருந்த போது ஆரிப் கான் (22) என்ற இளைஞர் என்னை தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து கழுத்தை நெறிக்கி கொலை முயற்சித்ததாக தெரிவித்தார். அதன்பின் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, பாலியல் வன்புணர்வு, கொலை, போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆரிப் கானை கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோவில் இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details