தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை - நான்கு பேர் கைது - உத்தரபிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் ராஸ்டா பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 5), சிறுமி நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

17-year-old-gang-raped-in-ups-ballia
17-year-old-gang-raped-in-ups-ballia

By

Published : Aug 6, 2020, 7:50 PM IST

இதுகுறித்து, மாவட்ட காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் சஞ்சய் யாதவ் கூறும்போது, "நேற்று (ஆகஸ்ட் 05 ) மாலை 17 வயது சிறுமி, தனது தாய்வழி பாட்டியைப் பார்க்க மாவ்வில் இருந்து ராஸ்டா ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அச்சிறுமியை பின்தொடர்ந்த நான்கு நபர்கள், அச்சிறுமியை ஒரு ரிக்ஷாவில் அமரும்படி கூறியுள்ளனர்.

பின்னர், அவர்கள் நான்கு பேரும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று, அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் உள்ளவர்கள் காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் அந்த நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் நான்கு பேரும் 25ல் இருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள்.

இதையடுத்து சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும் அவரது அறிக்கைக்காக காத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details