சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைரஸ், சீனாவின் மற்ற மாகாணங்களுக்கும் மிக வேகமாகப் பரவியது. சீனாவைத் தவிர அமெரிக்கா, கனடா, இந்தியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன.
குறிப்பாக, ஈரானில் கேரளாவைச் சேர்ந்த 17 மீனவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்துவருகின்றனர். அங்கு சிக்கிய மீனவர்கள் விழிங்கம், பூவர், பொழியூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என கேரள மீனவளத்துறை அமைச்சர் மெர்சிகுட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஈரானில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் 17 கேரள மீனவர்கள் சிக்கி கொண்டனர்.