சீனா, ஜப்பான், தென் கொரியா, ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் கொவிட்-19 (கொரோனா) வைரஸ் எனப்படும் தொற்றுநோய் வேகமாகப் பரவி வருகிறது. உலகளவில் இதுவரை மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வெளிநாட்டில் வசித்து வரும் இந்தியர்களில் எத்தனைப் பேருக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது என இன்று மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வெளியறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளிதரன், "வெளிநாடுகளில் வசித்து வரும் 17 இந்தியர்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 பேர் (ஜப்பானில் சிறைப்பிடிக்கப்பட்ட) 'டைமண்ட் பிரின்சஸ்' சொகுசுக் கப்பலில் பயணித்தவர்களாவர்.
வெளிநாட்டில் உள்ள 17 இந்தியர்களுக்கு கொரோனா ! - கொரோனா வைரஸ் பி முரளிதரன் விளக்கம்
டெல்லி : வெளிநாடுகளில் உள்ள 17 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு ஜப்பானில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்து வரும் இன்னொரு இந்தியரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து, இதுவரை 723 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் 119 பேர் 'டைமண்ட் பிரன்சஸ்' சொகுசுக் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் என்றும், இந்தியர்களை மீட்டுவர சீனாவுக்கு அனுப்பப்பட்ட இரண்டு சிறப்பு மீட்பு விமானங்களின் பயணச் செலவு ஐந்து கோடியே 98 லட்சத்து 90 ஆயிரத்து 352 ரூபாய் என்றும், ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட மீட்பு விமானத்தின் பயணச் செலவு குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும் இணை அமைச்சர் வி.முரளிதரன் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க : கொரோனா வைரஸ்: ஊழியர்களை ஊதியம் இல்லாத விடுப்பு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தும் எமிரேட்!