கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 15ஆம் தேதிவரை இந்தியா முழுவதும் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய போக்குவரத்தை தவிர அனைத்தும் முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலமான கோவாவில் சுமார் ஆயிரத்து 600 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர்.
ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த இந்தப் பயணிகள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் சிக்கித்தவித்துவருகின்றனர். இவர்கள் நிலவரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறைக்கு விவரம் அனுப்பப்பட்டு தற்போது தாயகம் திரும்ப ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.