தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!

ஹைதராபாத்: 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த 45 வயது தந்தையை போலீசார் கைது செய்தனர்.

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!

By

Published : Apr 17, 2019, 11:29 AM IST

நாட்டில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்று எதிர்பாராத பெண்களே இல்லை. இருப்பனும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.

அதன் ஒருபகுதியாக தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் மனதைப் பதற வைக்கும் ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரங்காரெட்டி மாவட்டத்தில் 16 வயது பெண் தனது தந்தையுடன் சில வருடங்களாக தனியாக வசித்து வந்துள்ளார். இவரது தாயார் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இவர்களை விட்டு பிரிந்து தனியாக சென்றுவிட்டார்.

இந்நிலையில் தனியாக வீட்டில் இருந்த அந்த பெண்ணை 45 வயதான அவரது தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து தனது தந்தை வீட்டிலிருந்து வெளியில் சென்ற போது வீட்டை வீட்டு தப்பித்துச் சென்ற அந்த பெண், தன் தாயை சந்தித்து கண்ணீர் தழும்பியபடி தந்தையின் அருவருக்கத்தக் செயலை கூறி அழுதுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாயர், பாதிக்கப்பட்ட தனது மகளுடன் ராகவேந்திரா நகர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார் . இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய ராகவேந்திரா போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 மற்றும் போஸ்கோ சட்டத்தின் கீழ் அந்த பெண்ணின் தந்தையை கைது செய்தனர். தந்தையே தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிரவலையை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details