ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜெய்சிங்புரா பகுதியில் வேளாண் துறை சார்பாக வெட்டுக்கிளிகளை தடுப்பதற்காக ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து இரவு நேரத்தில் தெளிக்கப்பட்டுள்ளது.
பின்னர், காலையில் அப்பகுதிக்கு அருகிலிருக்கும் தளத்தில் வேலை செய்வதற்காக 16 தொழிலாளர்கள் வந்துள்ளனர். அச்சமயத்தில் காற்றில் பரவியிருந்த பூச்சிக் கொல்லியை சுவாசித்த தொழிலாளர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.