கரோனா வைரஸ் பாதிப்பு நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. களப் பணியாளர்களைத் தாக்கி வந்த கரோனா, தற்போது நாட்டிற்காக உயிரைப் பணயம் வைத்து போராடும் பாதுகாப்புப் படையினரையும் விட்டுவைக்கவில்லை. அந்த வகையில், திரிபுரா மாநிலத்தில் உள்ள எல்லை பாதுகாப்புப் படையில் 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
எல்லை பாதுகாப்புப் படையினர் 16 பேருக்கு கரோனா! - கரோனா வைரஸ்
அகர்தலா: திரிபுராவில் உள்ள எல்லை பாதுகாப்புப் படையினர் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திரிபுரா முதலமைச்சர் பிலாப் குமார் தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில், "எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 16 வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 75 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், யாருக்கும் கரோனா தொற்று இல்லை. இதன்மூலம் மாநிலத்தில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 152ஆக அதிகரித்துள்ளது" எனப் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க:மிஷன் சாகர் : கோவிட்-19 எதிர்கொள்ள ஐந்து நட்பு நாடுகளுக்கு மருத்துவ உதவி அனுப்பிய இந்தியா!