தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

16.45 லட்சம் இந்தியர்கள் இதுவரை நாடு திரும்பியுள்ளனர் - மத்திய அரசு - ஏழாம் கட்ட வந்தே பாரத் திட்டம்

வந்தே பாரத் விமான சேவைத் திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 16.45 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Indians
Indians

By

Published : Oct 2, 2020, 10:26 AM IST

கரோனா பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து முடக்கம் கண்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் மத்திய அரசின் ’வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இந்த திட்டத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பான முக்கியத் தகவல்களை வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அதில், “ஆறாம் கட்ட வந்தே பாரத் திட்டம் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த ஆறாம் கட்டத்தில் மொத்தம் 894 சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு, சுமார் 24 நாடுகளிலிருந்து ஒரு லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர். தற்போது வரை சுமார் 16.45 லட்சம் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டம் மூலம் நாடு திரும்பியுள்ளனர்.

ஏழாம் கட்ட வந்தே பாரத் திட்டம் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த ஏழாம் கட்டத்தில், 19 நாடுகளுக்கு சுமார் 894 விமானங்கள் இயக்கப்படும். இதன் மூலம் 1.5 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக" அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:30 ரூபாய்க்கு தண்ணீர் சுத்திகரிப்பான்: மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details