மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மகாராஷ்டிராவில் தொடர் கனமழை: 16 பேர் சாவு! - மகாராஷ்டிராவில் தொடர் மழை
மும்பை: மகாராஷ்டிராவில் பெய்துவரும் கனமழை காரணமாக, இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் தொடர் மழை: 16 பேர் உயிரிழப்பு!
இது குறித்து புனே மாநகர ஆணையர் தீபக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வெள்ளத்தினால் புனேயில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மழையினால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 32 ஆயிரம் மக்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட புனேவைச் சுற்றியுள்ள சத்ரா, சங்ஹிலி, கோல்ஹாபூர் பகுதிகளில் மீட்புப் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.