தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேகாலயாவில் 1,525 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல்! - மேகாலயாவில் 1,525 கிலோ வெடிபொருள்கள்

ஷில்லாங்: கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் ஆயிரத்து 525 கிலோ வெடிபொருள்களுடன் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

6 arrested
6 arrested

By

Published : Dec 4, 2020, 11:54 AM IST

மேகாலயா மாநிலம் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டம் லாட்ரிம்பாய் பகுதியில் வெடிபொருள்கள் கடத்தப்படுவதாக அப்பகுதி காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், காவலர்கள் சம்பவயிடத்திற்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த அஸ்ஸாம் பதிவு எண் கொண்ட எஸ்யூவி காரில், ஏராளமான வெடிபொருள்கள் இருப்பது தெரியவந்தது. உடனே அவற்றைப் பறிமுதல்செய்ய காவலர்கள் காரிலிருந்த இருவரைக் கைதுசெய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாணையில், க்லீஹ்ரியாட் பகுதியிலிருந்து மேலும் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்தும் வெடிபொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டன. அதன்படி மொத்தமாக ஆயிரத்து 525 கிலோ வெடிபொருள்கள், ஆறாயிரம் டெட்டனேட்டர்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

இதையும் படிங்க:செந்துறை அருகே 6 கிலோ வெடிமருந்து பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details