தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 3, 2019, 10:17 AM IST

ETV Bharat / bharat

மகாத்மாவின் 150ஆவது பிறந்த தின கொண்டாட்டம்: 150ரூபாய் நாணயம் வெளியீடு

காந்திநகர்: மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளையொட்டி 150 ரூபாய் சிறப்பு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

150ரூபாய் நாணயம் வெளியீடு

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளையொட்டி நேற்று மாலை குஜராத் மாநிலம், அகமதாபாத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார்.
சபர்மதி நதிக் கரையில் அமைந்துள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற அவர், அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணவித்து, மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் அங்குள்ள அருங்காட்சியத்தை பார்வையிட்ட மோடி, வருகை பதிவேட்டில் குறிப்பு எழுதினார்.

மகாத்மாவின் 150ஆவது பிறந்த நாளில் இங்கு வந்திருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்து, இந்தியாவில் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழித்தது குறித்தும் குறிப்பிட்டார்.

பின்னர் ஆசிரம வளாகத்தில் நடைபெற்ற தூய்மை இந்தியா நிகழச்சியில் பங்கேற்றார். இதில் குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மகாத்மாவின் 150ஆவது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் 150ரூபாய் நாணயத்தை அவர் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், இன்று மகாத்மாவின் 150ஆவது பிறந்த தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். சமீபத்தில் ஐ.நா சபையில் சிறப்பு தபால் தலை வெளியிட்டனர். இப்போது இங்கே தபால் தலை மற்றும் நாணயம் வெளியிட்டிருக்கிறோம். மேலும் சுத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விலங்குகள் பாதுகாப்பு ஆகியவை மகாத்மாவிற்கு பிடித்தமானவை, இதற்கு ஆபத்தாக உள்ள ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை வரும் 2022ஆம் ஆண்டுக்குள் முழுமையாக ஒழித்துவிட வேண்டும் என்றார்.

இதையும் படிங்க:காந்தி ஜெயந்தி விழாவில் மது போதையில் இருந்த ஆசிரியர் சடலமாக மீட்பு !

ABOUT THE AUTHOR

...view details