உத்தரப் பிரதேச மாநில முசாபர்நகரில் உள்ள புர்காசி பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரை, அப்பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
பின்னர், வீட்டிற்கு வந்த அந்த சிறுமி கதறியபடி நடந்தவற்றை அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அந்த மூன்று இளைஞர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதேபோல், நேற்று வயலில் தனியாக இருந்த 14 வயதுடைய சிறுமியை, இரண்டு இளைஞர்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அவர்களையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மற்றொரு பொள்ளாச்சியா? மதுரையில் பரபரக்கும் பாலியல் குற்றச்சாட்டு - போலீசார் தீவிர விசாரணை