பிகார் மாநிலம் முஷாபர்நகர் பகுதியில் 15 வயது பள்ளி மாணவி ஒருவர், டிசம்பர் 9ஆம் தேதி பள்ளியில் இருந்து வீடு திருப்பினார். அப்போது, அந்த வழியாக டெம்போவில் வந்த மூவர், மாணவியை வீட்டில் சேர்ப்பதாகக் கூறினர். இதை நம்பிய மாணவி டெம்போவில் ஏறிச் சென்றார்.
இதையடுத்து, அந்த மூன்று பேரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர், அவர்கள் மாணவியுடன் சேர்த்து புகைப்படம் எடுத்து, இதுகுறித்து யாரிடமாவது கூறினால் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.