மதுபான கடைகளுக்கு முன்பு மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக Bev Q என்ற செயலியை கேரளா அரசு வெளியிட்டுள்ளது. இச்செயலி மூலம் டோக்கன் புக்கிங் செய்யும் மக்களுக்கு, டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தின் அடிப்படையில் மதுபானம் வழங்கப்படும். இச்செயலி மே27ஆம் தேதியன்று இரவில்தான், மக்கள் பயன்பாட்டிற்கு கூகுள் பிளே ஸ்டோரில் வந்தது.
இத்தகவல் பரவ தொடங்கியதையடுத்து, குடிமகன்கள் செயலியைத் தரவிறக்கம் செய்ய படையெடுக்கத் தொடங்கினர். அதன்படி, நேற்று ஒரேநாளில் 15 லட்சத்திற்கு அதிகமானோர் Bev Q செயலியை தரவிறக்கம் செய்துள்ளனர்.
ஆனால், டோக்கன் புக்கிங் செய்யும்போது, ஒருமுறை கடவுச்சொல் (OTP) குறுஞ்செய்தி கிடைப்பதில் மக்களுக்கு காலதாமதம் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.