ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார் மாவட்டத்தில் உள்ள சந்தேரி பகுதியில் பிர்லா சிமெண்ட் ஆலை உள்ளது. அந்த ஆலையில் நேற்று திடீரென கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இது குறித்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், வெப்பம் அதிகரித்ததால் கொதிகலன் வெடித்தாகக் கூறப்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்தவர்களின் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்கப்பட்டபோது, 15 பேரில் 11 பேரின் நிலை மோசமாக உள்ளதாகவும் அவர்கள் 70 காயங்களுடன் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகம் சார்பாக இந்த விபத்து நடந்ததற்கு காரணம் ஏன் என அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: கள்ளச்சாராய கும்பலால் காவலர்கள் கொலை..? சந்தேகத்தை கிளப்பும் அஸாம் விபத்து...!