வெளிநாட்டவருக்கு குடியுரிமை அளிக்கப்பட்டது தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் எம்பிக்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், "இந்தியா-வங்கதேச எல்லை ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து இதுவரை 14 ஆயிரம் 864 வங்கதேசத்தவர்களுக்கு இந்திய குடியுரிமைச் சட்டப் (1955) பிரிவு 7இன் கீழ் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
அரசு தரவுகளின்படி, 2019ஆம் ஆண்டு 40 ஆப்கானிஸ்தானியர்களுக்கும், 25 வங்க தேசத்தவருக்கும், 809 பாகிஸ்தானியர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசிய ராய், "மத்திய அரசு வதிமுறைகளை அறிக்கையாக வெளிட்ட பிறகு, இந்தச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள பிரிவினர்கள் இந்திய குடியுரிமைப் பெற விண்ணப்பிக்கலாம்" என்றார்.
கடந்த டிசம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்க தேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வந்த அகதிகள் எளிதில் இந்திய குடியுரிமைப் பெற வழிவகை செய்கிறது. இந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க : '70% மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவர்' - ஜெர்மனி பிரதமர் அதிர்ச்சித் தகவல்