கேரள அரசு சட்டப்பேரவையில் நேற்று பேசிய அம்மாநில தொழிற்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன், “மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு பெய்த பெருமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்குப் பிறகு, 147 கல் சுரங்கங்களுக்கும் அரசு முறையான அனுமதி அளித்துள்ளது. ஆனால், எந்த ஒரு சுரங்கமும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் அமைக்க அனுமதி வழங்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
2018 பெருவெள்ளத்துக்குப் பிறகு 147 சுரங்கங்களுக்கு அரசு அனுமதி!
2018ஆம் ஆண்டு கேரள பெருவெள்ளத்துக்குப் பிறகு 147 சுரங்கங்களுக்கு அரசு அனுமதியளித்துள்ளதாக தொழிற்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன் தெரிவித்துள்ளார்.
kerala Industries Minister e p jeyarajan
மேலும் அவர், “முறையான அங்கீகாரமின்றி மலப்புரம் கவளபாறையில் செயல்பட்டுவரும் எட்டு சுரங்கங்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கப்படும். சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கவனிப்பின்றி எந்த சுரங்கங்களுக்கும் அரசு அனுமதி வழங்காது” என்று கூறியுள்ளார். கேரளாவில் சுரங்கங்கள் அமைத்து இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்துப் பல தரப்பட்ட மக்களும் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனி ஒருவனும் சர்ச்சைக்குரிய கிராமமும்!