புதுச்சேரி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து எல்லைகளுக்கும் சீல் வைக்கப்பட்டு வெளிமாநில வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. உள்ளூர் மாநகர பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுவருகிறது. கோரிமேடு அருகே தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து புறப்படும் அனைத்து மாநகர பேருந்துகளிலும் ஒரு இருக்கைக்கு ஒரு பயணி மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
புதுச்சேரியில் 144 தடை உத்தரவு: ஷிஃப்ட் முறையில் அரசுப் பணியாளர்கள் - புதுச்சேரியில் 144 தடை உத்தரவு
புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து 50 விழுக்காடு அரசுப் பணியாளர்கள் ஷிப்டு முறையில் பணிக்கு சென்றுவருகின்றனர்.
pondicherry
ஏற்கனவே புதுச்சேரி முழுவதும் 50 விழுக்காடு அரசுப் பணியாளர்கள் ஷிஃப்ட் முறையில் பணியாற்ற வேண்டும் என அரசாங்கம் அறிவித்தது. அதன்படி இன்று புதுச்சேரி தலைமைச் செயலக அலுவலர்கள், பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை, மின்சாரத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் 50 விழுக்காடு பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர்.
இதையும் படிங்க:தமிழ்நாடு-புதுச்சேரி எல்லையில் தீவிர சோதனை: வெளிமாநில வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு