குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. குறிப்பாக, டெல்லியின் ஷாஹீன் பகுதியில் இரண்டு மாதங்களாகப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திவருகிறது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. பிப்ரவரி 23ஆம் தேதி, இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாற காவல் துறையினர் கண்ணீர் புகைவீசி கூட்டத்தைக் கலைத்தனர்.
மவுஜ்பூர், ஜாப்ராபாத் ஆகிய பகுதிகளில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதையடுத்து, வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோரை உள் துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.