குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக உள்துறை அமைச்சகம் 44 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் கர்நாடகாவின் ஒரு சில பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய அகதிகளுக்கு குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்படவில்லை.