கரோனோ வைரஸ் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஆந்திரா எல்லையில் உள்ள புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஏனாம்சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் சிவராஜ் மீனா பிறப்பித்துள்ளார்.
கரோனா அச்சம்: ஏனாமில் 144 தடை உத்தரவு - 144 implemented at Yanam district, Puducherry
புதுச்சேரி: கரோனா வைரஸ் காரணமாக புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏனாம் பகுதியில் உள்ள பொது இடங்களில் நான்கு பேருக்கு மேல் கூடக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள், திருமணக் கூடங்கள், உணவு விடுதிகள் போன்ற இடங்களில் அதிகளவில் மக்கள் கூடக் கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, புதுச்சேரி - ஆந்திர எல்லையான மாஹேவில் 144 தடை பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'என் குடும்பத்துல இருக்குற மத்தவங்களுக்கு பரவக் கூடாது'; விருந்தினர் மாளிகையில் கரோனா பாதிக்கப்பட்ட மகனை மறைத்து வைத்த தாய்!