தமிழ்நாடு மற்றும் புதுவையில் மொத்தமுள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
புதுச்சேரியில் 144 தடை உத்தரவு: இன்று மாலை முதல் அமல்! - election
புதுச்சேரி: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தேர்தலை நியாயமாக நடத்தும் வகையிலும், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதை தடுப்பதற்காகவும் இன்று மாலை 6 மணி முதல் 19ஆம் தேதி காலை 6 மணி வரை 60 மணி நேரத்துக்கு புதுச்சேரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் டி.அருண் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த தடைக்காலத்தின் போது 5 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பொது இடங்களில் கூடுவதற்கும், ஆயுதங்கள், பேனர்களை எடுத்துச் செல்வதற்கும், ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அருண் குறிப்பிட்டுள்ளார்.