தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜெய்ப்பூரில் ஊரடங்கு காலத்தில் 1,432 ஸ்மார்ட்போன்கள் மீட்பு

ஜெய்ப்பூர்: கரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு காலத்தில் 1,432 ஸ்மார்ட்போன்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஜெய்ப்பூர் காவல் துறை தெரிவித்துள்ளது.

ஜெய்பூர் காவல்துறை
ஜெய்பூர் காவல்துறை

By

Published : Jun 25, 2020, 2:44 PM IST

வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றைத் தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது எனவும் பொதுப் பேருந்துகளும் இயங்காது எனவும் மத்திய அரசு அறிவித்தது. இதனால் குடிபெயர்ந்த பல தொழிலாளிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லமுடியாமல் அவதிப்பட்டனர்.

இந்த நாடு தழுவிய ஊரடங்கு பொதுமக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தியது என்றாலும், கெட்டதிலும் ஒரு நல்லது எனக்கூறுவது போல் இந்தப் பொதுமுடக்க காலத்தில் பல நல்ல விஷயங்களும் அரங்கேறியுள்ளன.

பெரும்பாலான விபத்துகள், திருட்டுகளும்நடைபெற வில்லைஎன தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஜெய்ப்பூர் காவல் துறை ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில், "இந்த ஊரடங்கு காலத்தில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள 1,400-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்த பொது காவல் துறையினர் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் 1,509 ஸ்மார்ட்போன்கள் மீட்கப்பட்டன. ஆனால், இந்தக் குறுகிய காலத்தில் (ஊரடங்கு காலம்) 1,432 ஸ்மார்ட்போன்கள் மீட்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தென்கொரியா மீது உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்த வடகொரியா திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details