தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நல்லெண்ண அடிப்படையில் 1000க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிப்பு!

டெல்லி: காந்தியின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 1,424 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Prisoners

By

Published : Sep 28, 2019, 4:29 PM IST

காந்தியின் 150ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு தீர்மானித்து பல செயல்களை செய்து வருகிறது. இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில் இதுவரை 1,424 கைதிகள் இரண்டு கட்டங்களில் விடுவிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி கைதிகளை விடுவிக்கும் மூன்றாம் கட்டம் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு கைதியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகவும், எட்டு வழக்குகளின் ஆயுள் தண்டனையில் இருக்கும் கைதிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. குருநானக்கின் 550ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறையில் இருந்து ஒன்பது கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details