தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

14 வயதில் குரோர்பதி வெற்றியாளர், 33ஆவது வயதில் காவல் கண்காணிப்பாளர் - கோன் பனேகா க்ரோர்பதி யில் வென்றவர் தேர்வு நிலை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்பு

14 வயதில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாய் வென்று சாதனை படைத்த ரவி மோகன் சைனி, தற்போது தேர்வு நிலை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.

14 வயதில் கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் ஒரு கோடி வென்ற ரவி மோகன் சைனி
14 வயதில் கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் ஒரு கோடி வென்ற ரவி மோகன் சைனி

By

Published : May 29, 2020, 5:57 PM IST

ஹிந்தியில் பத்து சீசன்களைக் கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று ’கோன் பனேகா குரோர்பதி’. ஹிந்தி தவிர்த்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளிலும் சமீப வருடங்களாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 2001ஆம் ஆண்டு நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய கோன் பனேகா குரோபதி ஜூனியர் நிகழ்ச்சியில், தனது 14 வயதில் பங்குபெற்று, இறுதி சுற்றுவரை வந்து, அதிகபட்ச பரிசான ஒரு கோடி ரூபாயை வென்ற ரவி மோகன் சைனி என்பவர், தற்போது தேர்வு நிலை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.

ஏறக்குறைய 20 வருடங்களுக்குப் பிறகு தனது 33ஆவது வயதில், குஜராத் மாநிலம் போர்பந்தரில் தேர்வு நிலை காவல் கண்காணிப்பாளராக சைனி பொறுப்பேற்றுள்ளார். இந்த சம்பவம் அந்நிகழ்ச்சியின் தொடர் பார்வையாளர்கள் பலரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதனிடையே, கரோனா ஊரடங்கால் கோன் பனேகா குரோர்பதியின் 12ஆவது சீசன் தொடங்குவது தாமதமாகி வரும் நிலையில், விரைவில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :ரசிகர்களுக்கு ஹாரி பாட்டரை படித்துக் காட்டிய 'ஸ்மைலி குயின்'

ABOUT THE AUTHOR

...view details