கரோனா தீநுண்மி அதிகளவில் பரவிவருவதைத் தடுக்க பொதுமக்கள் தங்கள் கைகளை கிருமிநாசினி பயன்படுத்தி 20 விநாடிகள் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.
கரோனா அச்சம் காரணமாக முன்பைவிட கிருமிநாசினிகள் தற்போது அதிகளவில் விற்பனையாகிறது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவர் கிருஷ்ணன் குப்தா, ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடாமலேயே பயன்படுத்தக்கூடிய ”ரோபோட்டிக் சானிடைசர்”யை உருவாக்கியுள்ளார்.