தமிழ்நாடு

tamil nadu

மொத்தம் 14 ஆயிரத்து 962 மாணவர்கள் புதுச்சேரியில் தேர்வெழுதினர்

By

Published : Mar 2, 2020, 7:31 PM IST

புதுச்சேரி: 2019-2020ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை மொத்தம் 14 ஆயிரத்து 962 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.

2ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
2ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி

புதுச்சேரி, காரைக்காலில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மார்ச் 24ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இத்தேர்வில், புதுச்சேரியிலுள்ள 135 அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 12 ஆயிரத்து 577 மாணவ, மாணவிகளும் 579 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

அதேபோல் காரைக்காலில் உள்ள 23 அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 385 மாணவ, மாணவிகள் 178 தனித்தேர்வர்கள் தேர்வுகளை எழுதுகின்றனர். புதுச்சேரியில் 32 மையங்களிலும் காரைக்காலில் 9 மையங்களிலும் தேர்வுகள் நடைபெறவுள்ளன. தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க புதுச்சேரியில் 5 பறக்கும் படை, காரைக்காலில் 2 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

2ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி

மாணவ, மாணவிகள் தேர்வறைக்குல் கால்குலேட்டர், செல்போன் போன்ற உபகரணங்கள் எடுத்துச்செல்லக்கூடாது. பெல்ட் அணிந்து செல்லக்கூடாது, ஆசிரியர்கள் தேர்வறைக்கு செல்போன் கொண்டுவரக்கூடாது என கடுமையாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க;

அவைத்தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details