உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இந்திய ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் பாதுகாப்பு கண்காட்சி 2020 நடந்துவருகிறது. கண்காட்சியின் இரண்டாவது நாளான நேற்று இந்தியா-ரஷ்யா ஆகிய நாடுகள் இடையே 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்கள் மூலம் பாதுகாப்பு படை மேலும் வலுப்பெறும். ராணுவ தளவாடங்களை பயன்படுத்துவதில் நீடித்துவந்த சிக்கல்கள் தீர்க்கப்படும். மேலும் பாதுகாப்பு தொடர்பான பொருட்களை ரஷஷ்யா இந்தியாவுக்கு தாராளமாக வழங்கும்.
பாதுகாப்பு கண்காட்சி 2020: இந்தியா-ரஷ்யா இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து - இந்தியா-ரஷியா புரிந்துணர்வு ஒப்பந்தம், லக்னோ பாதுகாப்பு கண்காட்சி, மேக் இன் இந்தியா
டெல்லி: இந்திய ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் பாதுகாப்பு கண்காட்சி 2020ல் இந்தியா-ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
கடந்த 60 ஆண்டுகளாக பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவும்-ரஷ்யாவும் நட்பு நாடுகளாக செயல்பட்டுவருகின்றன. இந்த பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து மாநாட்டின் இணைத் தலைவர் அஜய் குமார் கூறும்போது, “இந்தியாவில் விரைவாக உற்பத்தியை தொடங்க எதிர்பார்க்கிறோம். இரு நாடுகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ராணுவ உபகரணங்கள் தயாரிப்பில் இந்தியாவுக்கு பலனளிக்கும்” என்றார்.
இதையும் படிங்க: ராணுவத் தளவாட ஏற்றுமதி 5 பில்லியன் டாலராக அதிகரிக்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி