கர்நாடகாவில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா கூட்டணியின் 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள், தங்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் நேற்று அளித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று இரவே மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு சென்ற அவர்கள், அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.
கர்நாடகாவில் ஆட்சி கவிழும் அபாயம்? - கர்நாடகா
மும்பை: கர்நாடகாவைச் சேர்ந்த 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மும்பையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.
ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்காத நிலையில், கர்நாடகா அரசியல் களம் சூடி பிடித்துள்ளது. ஆட்சி நடத்த பெரும்பான்மை இடங்கள் எந்த கட்சிக்கு கிடைக்காததால், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து கடந்த ஒரு வருடமாக ஆட்சி நடத்தி வருகின்றன.
இந்நிலையில், 14 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ராஜினாமா கடிதம் ஏற்கப்படும் பட்சத்தில், கூட்டணி ஆட்சி கலைக்கப்பட்டு கர்நாடகா சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.