தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பழங்குடியின மாணவர்களின் கல்வியை கேள்விகுறியாக்கிய ஃபானிபுயல்! - ஃபானி புயல்

புவனேஸ்வர்: ஃபானி புயலால் பழங்குடியின பகுதியில் உள்ள 139 பள்ளிகள் சேதமடைந்துள்ளதாக ஒடிசா மாநில தகவல்துறை செயலர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

ஃபானி புயல்

By

Published : May 13, 2019, 10:08 AM IST

ஒடிசா மாநிலம், பூரி பகுதியில் கடந்த 3ஆம் தேதி ஃபானி புயல் கரையை கடந்தது. இந்த புயல் தாக்கத்தினால் அம்மாநிலம் மிகுந்த சேதத்தை சந்தித்தது. குறிப்பாக இந்த புயலில் சிக்கி சுமார் 64 நான்கு பேர் இறந்துள்ளனர். புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்காக மத்திய அரசு ரூ. 1300 கோடி நிவாரண நிதியை வழங்கியுள்ளது.


இந்நிலையில் மாநிலத்தின் பழங்குடியின பகுதியில் இருந்த 139 பள்ளிகள் மிகுந்த சேதத்தை சந்தித்துள்ளதாக அம்மாநில தகவல்துறை செயலர் சஞ்சய்சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாநிலத்தை தாக்கிய ஃபானி புயல் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலில் வீடுகளை இழந்தோருக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என முதலமைச்சர் நவீன் பட்டநாயக் தெரிவித்துள்ளார். அதேபோல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் உரிய நிவாரண் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சேதமடைந்த வீடுகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் வரும் 15ஆம் தேதிக்குள் சீரமைத்துக் கொடுக்கப்படும். பழங்குடியின பகுதியை பொறுத்தவரையில், அந்த பகுதிகளில் உள்ள 139 பள்ளிகள் மிகுந்த சேதத்தை சந்தித்துள்ளன. அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இதேபோல் புவனேஸ்வர் பகுதியில் இருந்த ரூ.1.9 கோடி மதிப்பிலான பழங்குடியின அருகாட்சியகம் முற்றிலும் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details