டெல்லி: டெல்லியில் புதன்கிழமை (நவ.18) ஒரே நாளில் 131 கோவிட்-19 பாதிப்பாளர்கள் உயிரிழந்தனர். மாநிலத்தில் மொத்தம் 5,03,084 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் நவ.18ஆம் தேதி, கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டிருந்த 131 பேர் உயிரிழந்தனர். இது மாநிலத்தில் ஒரே நாளில் நிகழ்ந்த அதிகப்பட்ச உயிரிழப்பாகும். இதற்கு முன்னர் நவ.12ஆம் தேதி 24 மணி நேரத்தில் 104 பேர் உயிரிழந்திருந்தனர்.
டெல்லியை பொறுத்தமட்டில் இதுவரை 5,03,084 பேர் கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 43,147 ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட்கள் எடுக்கப்பட்டுள்ளன. 19,085 ஆர்டி-பிசிஆர் டெஸ்ட்கள் எடுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர். விகே. பால் செவ்வாய்க்கிழமை (நவ.17) டெல்லியில் கோவிட்-19 இறப்பை தடுப்பதில் வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர், “டெல்லியில் கோவிட்-19 பரவல் தொடக்க காலமான ஜூன் மாதத்தில் 72 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் 60 முதல் 70 சதவீத உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதிலும் பாதி மரணங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் நிகழ்ந்தன.