கோட்டயம், கிடாங்கனூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில், தங்களின் பிள்ளையை (பள்ளி மாணவி) ஐந்து பேர் கொண்ட கும்பல் இரண்டு ஆண்டாக பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை எடுத்து விசாரணையில் இறங்கினர் கிடாங்கனூர் காவல் துறையினர்.
விசாரணையில், தேவசயா, ரெஜி, ஜோபி, நாகப்பன் ஆகிய நால்வரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்தாவது நபரான பென்னி தலைமறைவாகி உள்ளதாகக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.