உத்திரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்திலுள்ள மாவட்ட சிறையில் 128 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து சிறையில் ஒரு குறிப்பிட்ட பகுதி கோவிட்-19 முதல் நிலை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. தொற்று உறுதியான 128 பேரில் 126 பேருக்கு கரோனா தொற்று அறிகுறி தென்படவில்லையென்றும் இரண்டு பேருக்கு மட்டுமே அறிகுறி தென்பட்டதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
128 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து பேசிய மாவட்ட நீதிபதி, "சிறையின் ஒரு பகுதி கோவிட்-19 முதல் நிலை மருத்துவமனையாக மாற்றப்பட்டு அங்கு தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சுழற்சி முறையில் மூன்று மருத்துவர் குழு செல்கிறது. தேவைப்பட்டால் நோயாளிகளை ஜான்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புவோம்" எனத் தெரிவித்துள்ளார்.