கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தானிகள், தங்களது தாய்நாட்டிற்குத் திரும்ப முடியுமாமல் இங்கேயே முடங்கினர்.
பத்திரமாகத் தாய்நாடு திரும்பிய 125 பாகிஸ்தானிகள் - அட்டாரி வாகா எல்லை
சண்டிகர் : கரோனா காரணமாக இந்தியாவில் முடங்கியிருந்த பாகிஸ்தானிகள் தாய்நாட்டிற்கு தற்போது திரும்பியுள்ளனர்.
attari-slash-wagah
இந்நிலையில், இந்தியாவில் முடங்கியிருந்த 125 பாகிஸ்தானிகள் அட்டாரி வாகா எல்லை வழியாக அவர்களின் தாய்நாட்டிற்கு நேற்று (நவ.04) சென்றடைந்தனர். இதற்கிடையே, ஐநா பொதுச் சபையின் தலைவர் ஜோசப் இந்திய-பாகிஸ்தான் உறவு குறித்து ஆலோசிக்க பாகிஸ்தான் சென்றுள்ளார்.
அவருடன் ஆறு பேர் கொண்ட குழு பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளது.