தலைநகர் டெல்லி பாசிம் விகாரைச் சேர்ந்த 12 வயது சிறுமி, கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி சிலரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், “டெல்லி காவல் துறை இந்த வழக்குத் தொடர்பான விசாரணையில் தங்களுடன் ஒத்துழைக்க மறுக்கின்றது. மருத்துவர்கள் அளித்துள்ள அறிக்கையில் சிறுமி கொடூரமாகத் தாக்கப்பட்டது தெரிகிறது. அவரது பிறப்புறுப்புகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவலர்கள் இந்த வழக்கை கொலை முயற்சி சம்பவமாக சித்தரிக்க முயல்கின்றனர். சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கிய குற்றவாளிகளுக்கு ஆறு மாதத்திற்குள் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.